பிறந்த ஊருக்கு நண்பரை அழைத்துச் சென்று, தன் வாழ்க்கையைக் காட்டுவது போல் படைக்கப்பட்டுள்ள நுால். மலை, வயல்வெளி, விவசாய முறை, மக்களின் உணவு முறை, விளையாட்டு என அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதிய உணவுத் திட்டம், தென்னை மரங்கள் மிகுதியான குமரிக்கண்டம், தென்னாடு குறித்த விளக்கம், கேழ்வரகு பயன்பாடு போன்றவை குறித்த விளக்கங்கள் சிறப்பானவை. இலக்குகளை மட்டும் மனதில் வைத்து உழைத்தால் முன்னேறலாம் என வழிகாட்டுகிறது. பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் பாடல்கள் உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளன.
வாழ்க்கை வரலாற்றை மட்டும் கூறாமல், சமகால அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார். பொருள் மிகுந்த சொற்றொடர்களை பயன்படுத்தியுள்ளார். படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கல்வியை விடாமல் கற்க வேண்டுமென வலியுறுத்தும் நுால்.
–
முகில் குமரன்