பட்டம் பதவி, பழக்க வழக்கம், கூச்சல் குழப்பம்... இப்படிச் சொல்வது நடைமுறையில் உள்ளது. இந்த இணை மொழிகளை தொகுத்து நகைச்சுவை கலந்து எழுதப்பட்டுள்ள இரட்டை வரி கவிதைகளின் தொகுப்பு நுால்.
உதாரணத்திற்கு, ‘காரசாரமாக விவாதித்தான் மிளகாய் வியாபாரி’ என்று எழுதப்பட்டுள்ளது. மற்றொன்றில், ‘ஆடி அசைந்து நடந்தான் யானைப்பாகன்’ எனக் குறிப்பிட்டுள்ளது. இப்படிப் பட்ட கவிதைகளை படிப்பதால் மொழி வளம் கூடும். கதை, கட்டுரை, புதிர், துணுக்குகள் எழுதலாம் என்ற எண்ணமும் தோன்றும்.