இலங்கை யாழ்ப்பாணம் நல்லுாரில் பிறந்த எழுத்தாளர் பொன்னுத்துரைக்கும், இலங்கையில் இஸ்லாமிய எழுத்தாளர்களுக்கும் இடையே நிலவிய சிறப்பான உறவு பற்றி எழுதப்பட்டுள்ள நுால்.
முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும் என்ற முத்தாய்ப்புடன் தரப்பட்டு உள்ளது. இலக்கியத்தில் முற்போக்கு எழுத்தாளர்களுடன் கருத்து ரீதியாக விவாதித்து, இலங்கைத் தமிழர் இடையே, ‘நற்போக்கு’ என்ற கருத்து அமைப்பை உருவாக்கியவர் பொன்னுத்துரை.
இவருடன், இலங்கைத் தமிழர் பகுதியில் இஸ்லாமிய எழுத்தாளர்களும், அரசியல்வாதிகளும் சுமுகமான தொடர்பும் உறவும் கொண்டிருந்தனர். அந்த தொடர்புகள் பற்றியும், அதன் வளர்ச்சி கட்டங்கள் குறித்தும் விரிவாக எழுதப்பட்டு உள்ளது. சிறப்பாக பேணிய உறவு நிலையை வெளிப்படுத்துகிறது. பொன்னுத்துரையின் வாழ்க்கை வரலாறின் ஒருபகுதி போல் உள்ளது.
–
ராம்