பின்தங்கிய கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், கடும் முயற்சியால் கல்வி பெற்று, தீவிர உழைப்பால் உயர்ந்ததை பதிவு செய்யும் சுயசரிதை நுால். ஏற்றுமதி தொழில் தொடர்பான தகவல்களை தெளிவாக சொல்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் கிராம நிலையை, வாய்ப்பின்மையை சித்தரித்துள்ளது. வறுமையால் பெற்ற அவதி, கடின உழைப்பால் உயர்ந்து வந்த பாதையை அழகாக எடுத்துரைக்கிறது.
பள்ளி மற்றும் கல்லுாரியில் படிப்பில், கிராமப்புறத்தவருக்குப் ஏற்பட்டிருந்த இடர்பாடுகளை கதை போல விவரிக்கிறது. மும்பை ஐ.ஐ.டி., மற்றும் பிரபல ஏற்றுமதி நிறுவனங்களில் பெற்ற அனுவங்களை காட்சியாக விரித்துரைக்கிறது. ஒவவொரு பணியிலும் தடங்கல்களை கடந்து வந்த விதத்தை பதிவு செய்துள்ளது.
ஏற்றுமதி தொழில் சார்ந்த சாதக, பாதகங்களை அனுபவத்தின் வழியாக நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. முன்னேற முயல்வோருக்கு வழிகாட்டும் சுயசரிதை நுால்.
–
மதி