கும்பகோணத்தைச் சுற்றியுள்ள 71 திருக்கோவில் சிறப்புகளை தரும் நுால். சங்க காலத்தில் கும்பகோணம் குடவாயில் கோட்டமாக விளங்கியதும், சோழ சாம்ராஜ்ய தலைநகரமாக, பழையாறை இருந்த வரலாறும் பதிவிடப்பட்டுள்ளன.
கும்பகோணம் பெயர் காரணம், சுவாமிமலை, தாராசுரம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதுார், கருப்பூர் ஆகிய ஐந்தும், ‘பஞ்ச குரோசத் தலம்’ என போற்றப்பட்ட புராண நிகழ்வுகள் சுட்டப்பட்டுள்ளது. மகாமகப் பெருவிழா பற்றி தலபுராணங்கள் கூறும் செய்திகளும் உள்ளன.
சூரியனார் கோவில், குருத்தலமான ஆலங்குடி நவக்கிரக கோவில், ஒப்பிலா நெய்வேத்தியம் படைக்கும் நிகழ்வு, பட்டீஸ்வரம், நாச்சியார் கோவில் திருவீழிமிழலை திருத்தலங்களின் வரலாற்றுப் பெருமைகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. கும்பகோணத்தின் பெருமையை பறைசாற்றும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்