புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் சிறுகதைகளை தாங்கியுள்ள நுால். ஒன்பது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. சில கட்டுரை மற்றும் கவிதைகளும் உள்ளன. பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் வழங்கிய பேட்டியும் பதிவாகியுள்ளது.
சிங்கள மொழியில் வெளிவந்த சிறுகதை ஒன்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர் அம்பையின் கதைகள் பற்றிய ஆய்வு கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள், வாழும் இடத்துக்கு தக்கவாறு மன உணர்வுகளையும், அமைப்பையும் வெளிப்படுத்துகின்றன. ஆழமான அனுபவத்தின் சாயலை காட்டுகின்றன. பல நாடுகளில் வாழும் தமிழர்களின் மனப்பதிவை, எண்ணப் போக்கை பதிவு செய்துள்ள நுால்.
–
மதி