ஹைக்கூ என்பது மூன்று வரி கவிதைகள். மூன்றாவது வரி முத்தாய்ப்பாக இருக்கும். நானிஷா என்பது நான்கு வரி கவிதைகள். முதல் இரண்டு வரிக்கும், பின் இரண்டு வரிக்கும் ஒப்பான நிலைமை அல்லது எதிரான நிலைமையில் இருக்கும். அந்த முயற்சியில் படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.
விடாமுயற்சி வெற்றிக்கு வழி என்று சொல்லித் தந்ததால் காதலிக்க ஆரம்பித்து விட்டானாம். இது எப்படி இருக்கு... ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பாடம் உழைப்பே உயர்வு தரும். படித்த மாணவன் உயர்நிலைக்கு வந்து விட்டான். ஆசிரியர் அதே நிலையில் தான் இருக்கிறார்.
அவளது கண்கள் மீன் தான்... பார்வையால் குத்தி கிழிக்கிறாளாம். சுவை கூடுதல். இரவல் வாங்கி வந்த புத்தகம் அறநெறிகளை சொன்னது. படித்த புத்தகம் பிடித்துப் போனதால் திருப்பிக் கொடுக்க மனமில்லை. அறம் வாழ்கிறது. நான்கு வரி பாடல்கள் படைக்க நினைப்பவர்கள் படிக்க வேண்டிய நுால்.
–
சீத்தலைச் சாத்தன்