கிராமிய சூழல் பண்பாட்டை போதிக்கும் கதை கொண்ட நாவல்களின் தொகுப்பு நுால். அநியாயக் காரனைக் கொன்ற நியாயத்தை புரிந்து கொள்ளச் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
உருவம் கண்டு எடை போட வேண்டாம் என உணர்த்துகிறது. தான் ஒதுக்கிய மனைவியே அவனைப் பற்றி மிக உயர்வாக சொல்லும் போது தான் உருவம் கண்டு ஒதுக்கிய உள்ளம்
உண்மையை உணர்கிறது. முட்கள் நிறைந்த பலாப்பழத்தின் உள்ளே தான் இனிக்கும் பலாச்சுளை இருக்கிறது. செழிப்பாய் தெரிகிற அத்திப் பழத்துக்குள் புழுக்கள் இருக்கின்றன என அழகாக எடுத்துக்காட்டுகிறது. பொழுதுபோக்க மட்டுமல்ல புரிந்து கொள்ள உதவும் கதைகளின் தொகுப்பு நுால்.
–
சீத்தலைச் சாத்தன்