மதுவுக்கு அடிமையானால், குடும்பம், உறவு, நட்பு, வேலை எல்லாம் எப்படி பாழாய் போகும் என உணர்த்தும் கதைகளின் தொகுப்பு நுால். முகவரி கேட்டால், பள்ளி, கோவில் என்பதற்கு பதில், டாஸ்மாக் கடைகளை அடையாளமாக கூறும் பழக்கம் தொற்றி விட்டதை கவலையுடன் கூறுகிறது.
போதை நபர்கள், வீட்டில் மட்டுமில்லாமல், பொது இடங்களில் தொந்தரவு ஏற்படுத்துவதை எரிச்சலுாட்டும் வகையில் அலசுகிறது. போதையால், கெட்ட எண்ணங்கள், பழக்கங்கள் தொற்றுவதை கூறுகிறது.
சகோதர – சகோதரிகளின் போராட்டம், நண்பர்களின் அறிவுரை பயனளிக்காததையும், அவர்களாகவே உணர்ந்து திருந்த வேண்டும் என அறிவுறுத்துகிறது. ‘குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு’ என்ற கதையாக, ‘சோமு! எங்களை மன்னித்து விடு’ கதை, சிரிப்பை வரவழைத்தாலும், குடும்பத்திற்கு சோகத்தை பரிசாக்குகிறது. மதுவை மையமாகக் கொண்ட ஏழு கதைகளின் தொகுப்பு நுால்.
–
டி.எஸ்.ராயன்