முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து, 42 பெரும் பிரிவுகளாக அமைந்துள்ள நுால். துணிச்சல், மன உறுதியாக செயல்பட்டது குறித்து பதிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் ஆசை, லட்சியம் வழக்கறிஞராவதாகவே இருந்துள்ளதாக குறிப்பிடுகிறது. எல்லோரையும் நல்லவர் என நம்பிவிடும் பண்பு கொண்டவர்.
மன்னிப்பு கேட்பது பலவீனத்தின் அடையாளம் என்று கணக்குப் போடும் உலகில், துணிச்சலுடன் வாழ்ந்து காட்டியவர். ஜெயலலிதா சொந்த வாழ்க்கையில் பலரால் ஏமாற்றப்பட்டார். புதிய நட்பைக் கண்டார். புத்தகங்களோடு பயணித்தார். தவறு செய்பவர்கள்மீது கோபப்பட்டிருக்கிறார். மன்னிக்கும் குணமும் அவரிடம் இருந்தது. சோதனைகளை, சாதனைகளாக்கியவர்.
ஜெயலலிதாவின் வளர்ச்சி, பெருமை, கொடையுள்ளம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என பல நிலைகளை பதிவு செய்துள்ள நுால்.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்