சிலப்பதிகார காவிய நாயகி கண்ணகி பற்றிய கதை பல விதங்களில் வழங்கப்பட்டு வருவதையும், வழிபடும் தெய்வமாக ஆனதையும் சித்தரிக்கும் நுால். கண்ணகி வழிபாட்டுக் கடவுளாக கொற்றவை, துர்கை, மாரி, பகவதி போன்ற பெயர்களில் வருவதை கள ஆய்வு செய்து விரிவாகவும் விளக்கமாகவும் தொகுத்துள்ளார்.
கண்ணகி வழிபாடு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருப்பதை வரலாறு, சமூகம் ஆகிய வழித்தடத்தில் காட்டுகிறது. கண்ணகி பற்றி புழக்கத்தில் உள்ள கதைகளை விரிவாக எடுத்துரைக்கிறது. நாட்டுப்புறங்களில் நிகழும் சடங்குகள், நம்பிக்கைகளை எடுத்துக் காட்டத் தவறவில்லை.
சோழ நாட்டின் புகாரில், பண்பாட்டின் அடையாளமாய் உருவான கண்ணகி, மாரியம்மனாய், மலையாளத்தில் பகவதியாய், கர்நாடகாவில் மங்கல தேவியாய், ஈழத்தில் கண்ணகி தெய்வமாய் கொண்டாடப்படுவதை உரிய ஆதாரங்களுடன் சொல்லியுள்ளது. அரிய உழைப்பில் உருவான நுால்.
–
ராம.குருநாதன்