மேடை பேச்சுக்கலை பற்றி எழுதப்பட்டுள்ள நுால். மேடை பயம் நீங்கி, கருத்துகளை எடுத்து வைப்பது பற்றிய அறிவுரைகளை தருகிறது. மேடைப் பேச்சின் பொன் விதிகளை குறிப்பிட்டு, முதல் கட்டுரை துவங்குகிறது. அந்த விதிகள் படி, தமிழகத்தில் பேச்சுக் கலையால் கருத்துகளை பரப்பிய அறிஞர்களின் சொற்பொழிவு மேற்கோள்களாக தரப்பட்டுள்ளது.
பயிற்சி செய்வதற்கு உரிய நடைமுறைகளை குறிப்பிடுகிறது. தொடர்ந்து மேடைப் பேச்சு மற்றும் பேட்டி அனுபவங்களை முன்னிறுத்தி, தகவல்கள் தரப்பட்டுள்ளன. புத்தகங்களை வாசிப்பதற்கும் மேடைப் பேச்சுக்கும் உள்ள உறவை தெளிவாக விளக்கியுள்ளது ஒரு கட்டுரை.
மேடைப் பேச்சாளராகி, கருத்துகளை பகிர விரும்புவோருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால்.
– ஒளி