புராணங்களில் இருந்து விஞ்ஞானம், விஞ்ஞானத்தில் இருந்து புராணம் என மனித வாழ்வில் கடவுள் தத்துவத்தை ஆத்மார்த்தமாக விவரிக்கும் நுால். முதல் மனிதனின் ஆசை நிலத்தில் இருந்தது என்பதற்காக, 3 அடி மண் என்ற அவதார கதை எழுந்தது. பூமியின் விட்டத்தை போல சூரியனின் விட்டம், 108 மடங்கு ஆகும்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் என்று, 27 நட்சத்திரத்திற்கும் 108 வருகிறது. வளைகாப்பு நிகழ்ச்சி என்பதும், ‘டால்பின் தெரபி’ என்பதும் ஒன்று தான். அதன் மெல்லிய ஓசை, கருவின் வளர்ச்சிக்கு உறுதுணையாகிறது பாரம்பரியத்தில் விஞ்ஞானம். வில்வ இலைகளை அரைத்து குடித்தால் குளிர்ச்சி என்பதை மருத்துவ விஞ்ஞானமும் சொல்கிறது. இது போன்ற தகவல்களை தரும் நுால்.
–
சீத்தலைச் சாத்தன்