பைந்தமிழுக்குத் தொண்டாற்றிய பாண்டித்துரைத் தேவரின் வாழ்க்கை வரலாறு, பதிப்பித்த நுால்கள் பற்றிய நுால். வ.உ.சி., உ.வே.சா., மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியின் தமிழ்ப்பணிக்கு உறுதுணையாக இருந்த பாண்டித்துரைத் தேவர். நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர்.
‘காவடிச் சிந்து’ எழுதியதுடன், ‘செந்தமிழ்’ என்ற இதழும் நடத்தியவர். பன்னுால் திரட்டு, நாற்கவிராச நம்பி அகப்பொருள் உரை நுால்களை வெளியிட்டு வளம் சேர்த்தவர். சைவ மஞ்சரி, தோத்திரத் திரட்டு போன்ற சமய நுால்களை பதிப்பித்தவர். இவர் தொகுத்த தனிச்செய்யுட் கோவையும், திருக்குறள் கதைகளும் குறிப்பிடத் தகுந்தவை. தமிழகராதி கொண்டுவரக் காரணமாக இருந்த இவரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. தமிழுக்கு தொண்டாற்றியவரின் பெருமையை பறைசாற்றும் நுால்.
–
ராம.குருநாதன்