பழமொழிக் கதைகள், கதைப்பாடல்கள் என ஒவ்வொரு பிரிவுகளிலும் 16 தலைப்புகளில் மொத்தம் 32 அறம் சார்ந்த கதைகளும் பாடல்களும் இடம் பெற்றுள்ள நுால். பழமொழிக் கதைகள் வழியாக, சிறுவர்களுக்கு இளம்வயதிலேயே ஒழுக்கம், அறம் சார்ந்த செயல்களையும் ஆழ்மனதில் பதியச்செய்ய முயல்கிறது.
படைப்பாக்கத்திறன்,கற்றல்திறன், சுயசிந்தனை வளம், உறவுகளை அணுகும் முறைகள் ஒருங்கே கூட்டித் தருகிறது. களவு செய்யக்கூடாது; வெளித் தோற்றத்தை நம்பக்கூடாது; பேராசை கூடாது; ஆசிரியர்களைப் போற்றுதல்; உண்மையை ஆய்ந்தறிதல்; நோயற்ற வாழ்வு; உண்மையாக இருத்தல்; வருமுன் காத்தல் போன்ற மையக்கருத்தை எளிய கதை வடிவத்திலும் பாடல் வரிகளிலும் உணர்த்துகிறது. சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்