சின்ன சின்ன பாக்களுக்குள் இத்தனை பெரிய கருத்துக்களா? என்று மலைக்க வைக்கும் பாடல்களின் தொகுப்பு நுால். பொருத்தமான படங்களும் உள்ளன. ‘நுாலகங்கள் திறந்தே இருக்கின்றன; படிப்பதற்கு நல்ல நுாலும் இல்லை’ என்ற வரிகளில் அரசியலை பார்க்க முடிகிறது.
‘மேக மங்கை காதலிக்கவில்லையெனில் பூமியில் தாவர குழந்தைகளின் பிறப்பு ஏது’ என தத்துவார்த்த உண்மை பேசுகிறது. தென்றலாய் தாலாட்டுவதும், புயலாய் புரட்டிப் போடுவதும் மனைவி அமையும் விதத்தில் இருக்கிறது என பகிர்கிறது. ரசித்துப் படிக்கலாம்.
– சீத்தலைச் சாத்தன்