காதல் உணர்வுகளை பல கோணங்களில் வெளிப்படுத்தும் கஜல் என்ற வகை கவிதைகளின் தொகுப்பு நுால். மனித மனங்களில் ஒற்றுமை, வேற்றுமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
துவக்கத்தில் காதலுக்கும் கண்ணாடிக்கும், காதலுக்கும் தண்ணீருக்கும் உள்ள ஒற்றுமை பற்றி பேசுகிறது. அதன் வழியாக காதல் கொண்ட மனதின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இது போல் நிறைய கவிதைகள் அமைந்துள்ளன. காதல் மனதின் சாய்வுகளையும் வெளிப்படுத்துகிறது.
காதல் உணர்வால் கனிந்த மொழியாக வெளிப்படும் கவிதை நுால்.