கிராமத்து வாழ்க்கை சுகமானது என உணர்த்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தெரு நாய், ஓணான், அணிலை விரட்ட சிறுவர்கள் கையாளும் யுக்தி ரசிக்க வைக்கிறது. ஆடம்பர தியேட்டர் வந்தாலும், ‘டென்ட்’ கொட்டகையில் சினிமாவை பார்க்கும் குதுாகலத்தை பகிர்கிறது.
கிராமத்தில் சகஜமாக புழங்கும் சொற்களை பட்டியலிடுகிறது. நுாலகத்தில் இலக்கிய மன்ற போட்டியில் தவழ்ந்து, எழுத்தாளராக புகழ் சேர்ப்பதை குறிப்பிடுகிறது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி, மாட்டு வண்டி, மிட்டாய் கடை என, அரை நுாற்றாண்டுக்கு முந்தைய கிராம தோற்றத்தை கண் முன் நிறுத்துகிறது.
அறியாமை, இல்லாமை எந்த விதத்திலும் சுமையாக, கசப்பாக இருந்ததில்லை என கூறுகிறது. பொழுதுபோக்குக்கு விளையாடுவதே, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கிறது. ஒவ்வொரு கதைகளும், இளம் பருவ அனுபவங்களை அசைபோட வைக்கின்றன.
–
டி.எஸ்.ராயன்