ஏழு கற்களை நாட்டி, தெய்வத் திருமேனிகளாக வழிபட்டதை பெருங்கோவில்களாக, வரலாற்றுப் பெட்டகங்களாக கலைகளாகியுள்ளதை பதிவு செய்துள்ள நுால். சக்தியை வேதங்கள், ‘கன்னியர்’ என போற்றுகின்றன. காவல் தெய்வங்களாக விளங்கும் அவை, மலைக்கன்னி, வனக்கன்னி, நீர்க்கன்னி, மலர்க்கன்னி, முனிக்கன்னி, தேவக்கன்னி, சுமதிக் கன்னி என வணங்கப்படுகிறது.
கன்னியர் சடங்கு, வழிபாடுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தர்மங்களை நிலைநாட்ட, அசுரர்களை அழித்தொழிக்க எழுவரும் தோன்றியதாக பதிவிடப்பட்டுள்ளது. ஸப்த மாதர், ஸப்த கன்னியருக்கு இடையேயான வேறுபாடுகள், எண் ஏழின் மகிமைகள் போன்றவை நிரல்படுத்தப்பட்டுள்ளன.
வேத கால கன்னியர்கள், ஸப்த மாதர்களின் சிற்பங்கள், கோவில்கள், தனிக் கோவில்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆன்மிக அன்பர்களுக்கு உவப்பான நுால்.
–
புலவர் சு.மதியழகன்