பொன்னி, 2/1758, சாரதி நகர், என்பீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை-91. (பக்கம்: 80)
"வாழ்வின் கட்டமைப்பிலிருந்து அது தரும் அனுபவத்திலிருந்தும் நேரடியாகவும், பூடகமாகவும் சமூகத்தின் அறியாமையில் இருந்து விழிப்புக்காக என் கவிதைகள் உருவாகின்றன என்றால் மிகையில்லை' என்று கூறும் ஆசு என்கிற ஆ.சுப்ரமணியனின் இக்கவிதைத் தொகுப்பில், 62 புதுக்கவிதைகள் உள்ளன.""காவிய நடை முகிழ்ந்தஅவளோர் தீயின் பிறை''என சோதிமிகு பெண்ணையும்,""ஞாபகங்களின் சிக்குடைத்து வெளிறிய முகத்தில்ஒரு கண்ணீர்ப் பெருக்கு''என மவுனம் உடைத்த கவியாகி, இருந்தும் - இல்லாதது போல் எல்லாம் தெரிந்த அனுபவ அறிவைப் பல கவிதைகளில் இழையோடச் செய்துள்ளார். எனினும், கவிதைக் கட்டமைப்பு வாசகனைக் கவருவதாய் அமையவில்லை. பல இடங்களில் இடறச் செய்கின்றன