இல்லற நெறியை மகிழ்வுடன் கொண்டு செல்ல உதவும், உண்மை காதலை கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 71 தலைப்புகளில் படைப்புகள் உள்ளன. மனித மனங்களின் ஆழத்தில் புகுந்து தேடி கிடைத்தவை பாடுபொருளாகியுள்ளன.
காதலுக்கு ஒப்பனை தேவையில்லை என்பதை, இயற்கை வடிவில் உணர்த்துகிறது. நாடு, மொழி, மதம், இனம், நிறம் கடந்து, உலகம் முழுதும் காதல் மட்டுமே பரவி கிடப்பதாக கூறுகிறது.
காதலர் தினம், உணர்வை எழுப்பி விடும் மகிழ்வாய் மலர வேண்டும் என பேசுகிறது. காதல் பயணத்தை, மை விழியாய் பேச வைக்கிறது. மரம் வளர்ப்பது போல், ஜாதி ஒழிய வீட்டுக்கு ஒரு காதல் வளர்க்க வேண்டும் என்கிறது. ஒவ்வொரு கவிதையும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. கதை, கவிதை எழுத துடிப்போருக்கு உதவும் நுால்.
–
டி.எஸ்.ராயன்