காந்தியத்தின் மகிமைகளை உரைநடை காப்பியமாக சின்ன சின்ன தலைப்புகளில் கவிதை அலைகளுடன் துள்ளச் செய்துள்ள நுால். ஆப்ரிக்காவில் பெற்ற ஆத்ம சக்தியால் தலைவனாக தகுதி அடைந்ததை பாடுகிறார். உண்ணாவிரதம், மவுன விரதம் என்ற வழிகளுடன் நடந்து நடந்து சுற்றி, நாட்டின் நாடியை தொட்ட போராட்டக் களத்தை பாடுகிறது.
காந்திஜியின் ஆளுமை உயர்வுக்கு ஆதாரமாக ஆப்ரிக்க சிறையில், 249 நாட்கள்; இந்திய சிறையில், 2,089 நாட்கள் அனுபவித்ததை காட்டுகிறது. அவை கொடுத்த துணிச்சலை அகிம்சை போர் என விளக்குகிறது. மரபுக் கவிதைகளும் இல்லை; புதுக் கவிதைகளும் இல்லை. இந்நுால், புது மாதிரி உரைநடை காப்பியம்.
–
சீத்தலைச் சாத்தன்