சுயமுனைப்பு சார்ந்து எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். எட்டு பிரிவுகளில் குட்டி குட்டியாக எழுதி தனித்தனி தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. கடைசியாக, ‘கவிதை வடிவில் சில கட்டுரைகள்’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது.
கவிதைகள் பெரும்பாலும், சுயம் சார்ந்து எழுதப்பட்டுள்ளன. சவால் விடும் தொனி சார்ந்தும் அமைந்துள்ளன. பெரும்பாலும், நான்கு அல்லது மூன்று வரிகளில் அமைந்துள்ளன; சில நீண்டுள்ளன.
கவிஞர் பாரதி, தமிழ் மொழி, தந்தை, நாட்டு நடப்புகள் பற்றி எல்லாம் கருத்து சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு பொருள்களை மையமாக கொண்டு அமைந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.
–
ராம்