தன்னம்பிக்கை இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என பதிவிடும் நுால். நம்பிக்கையூட்டும் 20 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எடிசன் போன்ற அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து தோல்வியைத் தழுவினாலும் முயற்சியால் எவரெஸ்ட் சிகரத்தை எட்ட முடிந்த டென்சிங், ஹில்லாரி மனோபலம் பதிவிடப்பட்டுள்ளது. வெற்றிக்கு தேவை லட்சம் அல்ல; லட்சியமே என உரைக்கிறது. திறமை, பலம், பலவீனம் அறிய வேண்டியது பற்றி உரைக்கிறது.
உலகையே பிரமிக்க வைத்த ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க், நீராவியில் இயங்கும் ரயிலை கண்டறிந்த ஸ்டீபன்சன், ஓவியத்தால் சாதனை புரிந்த வால்ட் டிஸ்னி வாழ்வியல் நிகழ்வுகள் ஒப்பிடப்பட்டுள்ளன.
நேரு, அம்பேத்கர், அப்துல் கலாம் போன்றோர் புத்தக மேய்ச்சலால் தான் புதிய உலகை அறுவடை செய்ததை குறிப்பிடுகிறது. இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் வெற்றிக்கான ஓட்டம் விரைவுபடும். விழித்துக் கொண்டவர்கள் விண்ணை கூட விலை பேசுவர் என விளக்கும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்