வழிபாட்டு முறைகள், வழிபாட்டு பொருட்கள், கடைப்பிடிக்கும் சடங்குகள், பழக்கவழக்கங்களில் உள்ள அறிவியல் ரீதியான உண்மைகளை மறந்து விட்டு, வெறும் சடங்குகளாக பார்ப்பதால் அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் தர மறுக்கிறோம்.
இத்தகைய ஆன்மிக பழக்கவழக்கங்களில் பொதிந்துள்ள அறிவியல் ரகசியங்களை வெளிக் கொண்டு வரும் புத்தகம்.
சிறிய கட்டுரைகளை உள்ளடக்கிய மருந்து பெட்டகமாக விளங்குகிறது. ஒரு பொருளுக்கான பெயர்க் காரணம், விளைகிற பகுதி, பயன்படும் தன்மை, இலக்கியச் சான்றுகள், அயல்நாட்டார் குறிப்புகள், அறிவியல் எம்முறையில் பயன்படுத்தச் சொல்கிறது என வரிசைப்படுத்தியுள்ளது. இது இத்தனை அருமையுடையதா என்றெல்லாம் திகைப்பில் ஆழ்த்துகிறது.
மருத்துவ முறைகளும், அறுவை சிகிச்சை முறையும் அன்றைக்கே இருந்திருக்கின்றன என்பதை எடுத்துரைத்திருக்கிறது.
–
இளங்கோவன்