வியாச பாரதத்தில் ஆரண்ய பருவத்தில் சொல்லப்பட்ட, நளோபாக்யான பருவத்தின் விரிவே இந்த காவியம்! இந்த நுால். இதை ஏற்கனவே ‘நளவெண்பா’ என்ற காப்பியமாக தமிழில் தந்துள்ளார் புகழேந்திப் புலவர். அதிவீரராம பாண்டியர் என்ற மன்னர் நைடதம் என்ற பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார்.
நளன் சரிதத்தை சமஸ்கிருத மொழியில் ‘நைஷதீயசரிதம்’ என்ற மகா காவியமாக படைத்து உள்ளார் ஸ்ரீ ஹர்ஷகவி. இதன் முதல் சருக்கத்தில் அமைந்துள்ள 145 பாடல்களை அழகுத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியர் சி.முருகன். நுாலின் சமஸ்கிருத மூலம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி பெயர்ப்பு வடிவங்களை ஒருங்கே இணைத்திருப்பது சிறப்பம்சம். மகா அரசரின் வரலாற்றைப் படிப்பதால் நிம்மதி, சாந்தி அடையலாம்.
–
பேராசிரியர் அரங்க ராமலிங்கம்