ஜனாதிபதியாக அப்துல்கலாம் பதவி வகித்த காலத்தில் நெருக்கமிக்க அதிகாரியாக நிழல்போல் தொடர்ந்த அனுபவத்தை பதிவு செய்துள்ள நுால். ஜனாதிபதியின் செயலராக ஐந்து ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர் எழுதி உள்ளார். ஒரு சுயசரிதை போல் அமைந்துள்ளது.
ஜனாதிபதியாக பதவி வகித்த போது, அப்துல்காலம் முக்கிய பிரச்னைகளில் முடிவு எடுப்பதில் காட்டிய நுட்பம், திட்டங்களில் தொலைநோக்கு பார்வை, நிர்வகித்த விதம், மேம்பாட்டில் காட்டிய அக்கறையை அதிகாரப்பூர்வமாக தருகிறது.
வெளிநாட்டு பயணங்கள், தலைவர்களுடன் பழகிய விதம், பிரச்னைகளை சமாளித்த விதம் என நிகழ்வுகளின் உள்ளீடு காட்டப்பட்டுள்ளது. அப்பழுக்கின்றி செயல்பட்டதை எடுத்துக் காட்டுகிறது. பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப் சந்திப்பு, அமெரிக்க ஜனாதிபதி வருகையில் நடந்த சம்பவங்கள் என, புதிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. எளிய நடையில் மறைந்த தலைவரின் மாண்பை கூறும் நுால்.
–
ஒளி