நம்பிக்கை, அற்புதத்திற்கு இடைப்பட்ட வாழ்வை மென்மையாக விவரிக்கும் ஆங்கில நுால். நாவல் போல துவங்கி, மலையேறும் முயற்சி, நம்பிக்கை, அற்புதத்தை உணர்த்துகிறது. நிகழ்வில் இடம் பெறும் காலப் பின்னணியை துல்லியமாக எடுத்துச் சொல்கிறது. சுயசரிதை போல் தொடர்கிறது.
நிகழ்வுகளின் ஊடே தத்துவ தரிசனம் வெளிப்படுகிறது. இந்திய – சீன போர் சூழலில் ஒரு குடும்பத்தின் நிகழ்வை எடுத்துரைத்து, டிசம்பர் 2022 சென்னை அடை மழையுடன் நிறைவடைகிறது.
சுவாசப் பயிற்சியை அனுபவத்துடன் இணைத்து நுட்பத்துடன் முழுமை நோக்கி நகர்கிறது. புது அனுபவம் தருகிறது. சிமிழுக்குள் அடைப்பது போல் புத்தகத்திற்குள் உலக அனுபவத்தை அடக்கியுள்ளார். பள்ளி படிப்பு, நிர்வாக அனுபவத்தை இந்திய பாரம்பரியத்திற்கு ஏற்ப வெளிப்படுத்தும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்