அனுபவ பாடம் மற்றும் கற்பனை கலந்து எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். இதில், 10 கதைகள் ஒரு பயண அனுபவத்தில் கிடைத்த சுவாரசிய தகவல்களை உள்வாங்கி நேர்த்தியாக படைக்கப்பட்டுள்ளது.
மொத்தம், 12 கதைகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் பெற்ற கருத்துகளை கொண்டுள்ளன. ஒவ்வொரு கதை முடிவிலும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்துள்ளன. அது வியப்பை ஏற்படுத்தும் விதமாக ஆர்வத்தை துாண்டுகிறது. வாசிப்பின் சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறது.
இந்த நுாற்றாண்டின், உலகில் சிறந்த நாவலாசிரியரான ஆர்ச்சரின் கைவண்ணத்தை, தமிழில் கச்சிதமாக மொழியாக்கம் செய்துள்ளார் பவித்ரா ஸ்ரீநிவாசன். எளிய நடை வாசிப்பை துாண்டுகிறது. கதைகள் விறுவிறுப்பு குறையாமல் உள்ளன. பரபரப்புக்கு பஞ்சமில்லாத தொகுப்பு நுால்.
–
மதி