கடலோர மக்களின் அன்பை, பண்பை, உழைப்பை, கொண்டாட்டத்தை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பரதவர் இனத்தவர் வாழ்வை கதை வழியாக பேசுகிறது. வெவ்வேறு இடங்களில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறை சேர்வதை, ‘மெரி கிறிஸ்துமஸ்’ கதை கொண்டாட வைக்கிறது. படைப்புகள் யூகிக்க முடியாத திருப்பங்களுடன், வட்டார மொழியில் நகர்கின்றன.
கடலோர மக்களின் வாழ்க்கையின் பல கோணங்களை அறிய தரும் நுால். – டி.எஸ்.ராயன்