வாழ்க்கை வரலாற்று நுால்களை ஆராய்ந்து, எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். தனி மனித வாழ்க்கையுடன் சமூகம் சார்ந்த செயல்பாடுகளையும் கண்முன் நிறுத்துகிறது. மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் எழுதப்பட்ட, 20 சுயவரலாறு நுால்களை ஆய்வு செய்துள்ளது. புனைவுகள் இன்றி வாழ்க்கையை வெளிப்படையாக தெரிவிக்கும் நுால்கள் இவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழில், கருக்கு, வடு, முள், வெள்ளை மொழி, என் தந்தை பாலய்யா போன்ற நுால்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நுாலும், தனிமனித அனுபவத்துடன், அவர்கள் வாழ்ந்த சமூகத்தின் முகத்தை காட்டுவதாக தெளிவு படுத்தப்பட்டுள்ளது. வாழ்க்கை வரலாறுகளை புரிந்து கொள்ள உதவும் நுால்.
– மதி