வெண்பா வடிவில் அறவுரை பகரும் மரபு வழிபட்ட கவிதைகளாய் கருத்துகள் செறிந்து கிடக்கும் நுால். சங்க இலக்கியங்கள் துவங்கி சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருக்குறள், திருவருட்பா, நீதி வெண்பா இலக்கியங்களில் உள்ள பழந்தமிழ் சொற்களுக்கு உயிரூட்டி கற்பனை வளம், உவமை நயம், தொடை நயங்கள் குன்றாது அறவுரைகள் அள்ளி தரப்பட்டுள்ளன.
‘தாமரையின் பச்சிலை மேல் நீர் துளி போல்’ போன்ற உவமை நயங்களும், ‘கோடை நடுப்பகலில் கொட்டும் மழையினிது; வாடைக்கு இதமாய் வரும் வெயில் போல் ஆலமரம் நாண நட’ போன்ற நன்னடை நயம் இன்பம் பயப்பதாய் அமைந்துள்ளன. மொத்தத்தில் 21ம் நுாற்றாண்டில் முகிழ்த்த 14ம் நுாற்றாண்டு இலக்கியமாய் திகழ்கிறது.
–
புலவர் சு. மதியழகன்