மதங்களுக்கு இடையே ஒற்றுமையை நிலைநாட்டும் நுால். ஞானம், கர்மம், தியானம், பக்தி பற்றி பகவத் கீதையில் விளக்கத்தை கூறுகிறது. யோகம், ஜீவாத்மா, பரமாத்மாவை இணைப்பதை விளக்கியுள்ளது.
இஸ்லாமிய தத்துவமும், புத்த மதச் சிந்தனையின் பொதுத்தன்மையும் கூறப்பட்டுள்ளது. மதம் மானுடத்தை உயர்நிலை அடையச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. ஹிந்து, இஸ்லாம், பவுத்த உள்ளடக்கத்தை இனிமையாக எடுத்துரைக்கும் நுால்.