புத்தகம் தோன்றிய வரலாற்றை சுருக்கமாக தரும் நுால். அச்சு தொழில் நுட்ப வளர்ச்சியை விவரிக்கிறது. வாசிக்க வேண்டியதன் அவசியத்தை சுருக்கமாக தந்து, விபரங்களை பதிவு செய்கிறது. காகிதத்தின் கண்டுபிடிப்பு, அச்சு மை உருவாக்கம் எல்லாம் வரலாற்று வரிசைப்படி சொல்லப்பட்டுள்ளன.
உலக புத்தக தினத்தின் முக்கியத்துவம், இந்தியாவின் முதல் புத்தகம், நுாலக இயக்கம், எழுதும் முறை என, 45 குறுந்தலைப்புகளில் தகவல்களை அடக்கியுள்ளது. எழுதிய புத்தகத்துக்கு காப்புரிமை பெறுவது, காப்புரிமையின் வளர்ச்சி வரலாறு, வாழ்வை மேம்படுத்தும் வாசிப்பு, தமிழகத்தில் புத்தகப் பூங்கா என பல தகவல்களை கொண்டுள்ளது. புத்தகத்தின் வரலாறு, வளர்ச்சி பற்றி சுருக்கமாக தரும் நுால்.
–
ஒளி