வரலாற்று நிகழ்வுகளை புனைவாக படைத்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
புதுச்சேரி கவர்னர் மிஸே லோரிஸ்தான் தங்கியிருந்த பங்களா வசதிகளை, ‘மோரிசான் தோட்டம்’ கதை சொல்கிறது. டச்சுக்காரரை, ‘ஒலந்தீஸ்’ என அழைப்பதையும், பிற்காலத்தில் அதுவே, உழந்தை கீரைப்பாளையம் ஆனதையும் கூறுகிறது.
ஆச்சர்யமூட்டும் சுவாரசியமான தகவல்கள் கதைகளில் புதைந்து கிடக்கின்றன. பறவைகள் குறித்த அரிய தகவல்கள் உள்ளன. அறிவியலையும், சூழலியலையும் எப்படி பார்க்க வேண்டும் என்பதை, ‘ரோபோ மரங்கள்’ கதை சிந்திக்க வைக்கிறது. பிரான்சில் சம்பாதித்து, புதுச்சேரியில் வாங்கிய வீடு பற்றி, ‘அலிபாபாவும் 30 திருடர்களும்’ கதை அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. ஈர்ப்பை ஏற்படுத்தும் கதைகளின் தொகுப்பு நுால்.
– டி.எஸ்.ராயன்