நேசிப்பின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை தொகுப்பு. மொத்தமுள்ள 37 தலைப்புகளும், நம்பிக்கை ஒளி பாய்ச்சுகிறது. பிறப்பின் அர்த்தத்தை புரிய வைக்கிறது. பாசம் என்றும் நிலைத்திருப்பதை கூறுகிறது.
அறியாமையால் ஏற்படும் விளைவுகளை பேசுகிறது. காலம் ஒரு நாள் மாறும் என நம்பிக்கை ஊட்டுகிறது. தேடல் மனிதனின் ஒவ்வொரு அசைவிலும் இருக்க வேண்டும் என்கிறது. விளைந்து செழிக்கும் பயிர்களில் படிந்திருக்கும், உழைப்பின் வியர்வையை கோடிட்டு காட்டுகிறது.
போராட்டம் புதிதல்ல உனக்கு... கவிதை, பெண்களை இரண்டாம் நிலைக்கு தள்ளும் சமூக காரணிகளை பேசுகிறது. இப்படி ஒவ்வொரு கவிதையும், சமூக நிகழ்வுகளை அலசுகிறது. கவிதை எழுத முயற்சிப்போருக்கு உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்