பாசம், அன்பு, அழுகை போன்ற உணர்வுகளை பேசும், 40 தலைப்புகள் கொண்ட கவிதை தொகுப்பு. வெள்ளை மனம் படைத்த குழந்தையாய் மாறுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை பகிர்கிறது.
தாத்தா, பாட்டி கதை வழியாக காட்டும் அன்பை விவரிக்கிறது. மதுவின் கோரத்தால் சீரழியும் வாழ்க்கை அச்சமூட்டுகிறது. வறுமையின் கோர முகத்தை கையேந்தும் பாத்திரம் வழியாக காட்டுகிறது.
அலைபேசியை அணுகும் முறையை கூறுகிறது. விபத்தை கண்டால், மனிதம் மனம் துடித்து ஓடி காப்பாற்றும் என்கிறது. அறிவாளி, முட்டாள் பேசும் வார்த்தையிலும் அர்த்தம் இருப்பதை கவனிக்க சொல்கிறது. ஒவ்வொரு கவிதையும், ஒரு கருத்தியலை கூறுகிறது.
– டி.எஸ்.ராயன்