இந்தியாவின் தென் பகுதியில் வட்டாரத்தில் செல்வாக்கு பெற்ற தெய்வங்கள் பற்றி ஆராய்ந்து தெரிவிக்கும் நுால். ஆங்கிலத்திலிருந்து தமிழில் தந்துள்ளார் வானதி.
கிராம கோவில் சடங்குகள், புழங்கும் பண்பாட்டு செயல்பாடு பற்றி விரிவாக ஆராய்ந்து தகவல்களை தருகிறது. சடங்குகளின் பின்னணி செய்திகளையும் கூறுகிறது. மக்களின் நம்பிக்கையை சிதைக்காத வகையில் அமைந்துள்ளது.
கோவில்களில் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள், கிராமப்புற மக்களின் பழக்க வழக்கங்கள் குறித்து எல்லாம் பேசுகிறது. ஆய்வு நடத்தப்பட்டபோது, இந்த நிலப்பரப்பு இருந்த சூழலையும் தெளிவாக உரைக்கிறது. மக்களின் பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் நுால்.
– ராம்