ஆதிகால வழிபாட்டு முறைகளை விளக்கும் நுால்.
மனிதன் தன்னை பாதுகாக்க வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொண்டான். இயற்கையை வழிபட்டது, சிவலிங்க வழிபாடு, சிவலிங்கத்தின் வகைகள் பட்டியலிட்டு தரப்பட்டுள்ளன.
கடவுள் என்ற சொல்லின் விளக்கம், ஐந்தொழில் புரியும் ஆடவல்லானின் அருட்செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. இறைவன் எல்லாமுமாக உலகை இயக்குகிறான் என்று கூறுகிறது. ஐம்பூதங்களும் அவனே, ஐந்தொழில் புரிபவனும் அவனே என முன்னிலைப்படுத்தி விளக்கம் தருகிறது. உருவ வழிபாடு தொன்று தொட்டு இருந்ததை சான்றுகளுடன் விளக்குகிறது. சிவனின் பல்வேறு நடனங்களையும் காட்டுகிறது.
– புலவர் இரா.நாராயணன்