‘தினமலர் வாரமலர்’ உட்பட பிரபல இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். எதிர்பாராத சம்பவங்களால் ஏற்படும் அனுபவம், 63 கதைகளில் எளிய நடையில் பதிவாகி படிப்யை தருகிறது.
அன்றாடம் கண் முன் நடக்கும் நிகழ்வுகள் தான் கதையின் மையக்கருக்கள். கோபம், எரிச்சல், அறியாமை போன்றவற்றால் பதற்றம் கொள்வது பயனற்றது என்பதை வித்தியாசமான முடிவுகள் வழியாக உணர வைக்கின்றன.
ஏளனம், உதாசீனம், அலட்சியம், ஆற்றாமையால் நன்மை கிடைக்காது என்பதையும் உணர்த்துகிறது. சுருக்கமான உரையாடல் வழியாக கதைகள் நகர்கின்றன. எதிர்பாராத முடிவுகள் சுவாரசியமாக்குகின்றன.
மனித மனங்களை நுட்பமாக வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– ராம்