அனுபவ பாடத்தை மெருகேற்றி, கற்பது மற்றும் கற்பிப்பிக்கும் நோக்கிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
தொகுப்பில், 100 கதைகள் உள்ளன. அனைத்தும் தொடர்ச்சியான வாழ்வு அனுபவங்களை கோர்த்ததுபோல் உள்ளன. அன்றாட நிகழ்வை மையமாக கொண்டுள்ளன. ஒன்றைப் போல் மற்றது இல்லை.
உறுத்தும் பிரச்னைகளை நடிப்பால் தீர்க்கும் வழிமுறைகளை சுவாரசியமாக சொல்லியுள்ளது. தடுமாற்றங்களை தவிர்க்க நல்ல வழிமுறைகளை புகட்டுகிறது. வங்கியில் பேனா தேடி அலைபவரை மையமாக்கிய பாடம் கதை சிறப்பாக உள்ளது. மனதை தொடும் வண்ணமயமான சிறிய கதைகளின் தொகுப்பு நுால்.
– வினா