தனிமனித ஒழுக்கம், இயற்கை பாதுகாப்பு கருத்துகளை கொண்ட கவிதைகளின் தொகுப்பு நுால். பெற்றோர், பிள்ளைகள் கருத்து வேறுபாட்டை மறந்து, ஊருக்கு உபதேசம் சொல்லப் போவதை கண்ணீரோடு பேசுகிறது.
கலாசார சீரழிவுகளை, ஒழுக்கத்திற்கு எதிரான சட்டங்கள் வழியாக வேதனையோடு பகிர்கிறது. உணவளித்து உப்பிட்டு வாழ வைத்த கடல் தேவன் கருணையின்றி முகத்தை திருப்பிக் கொண்ட நிகழ்வாக, ‘சுனாமி’யை கூறுகிறது.
மரம் நடுவது, ஆங்கிலம் படிப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. இயற்கையின் நீதியாக எடுத்துரைக்கிறது. நீர் வளம் பெருக, மரங்களை வெட்டாதீர்கள் என வேண்டுகோள் விடுக்கிறது. ஒவ்வொரு கவிதையும் ஒரு அர்த்தத்தை கொடுக்கிறது.
– டி.எஸ்.ராயன்