இந்து முன்னணியின் வரலாற்றை கூறும் நுால். தர்மம் காக்க துவக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து முன்னணியால் ஏற்பட்ட பயன்கள், முன்னேற்றங்களை விளக்குகிறது. ராம கோபாலன் ஆற்றிய பணியை விவரித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தால் பக்திநெறி பரப்பியதை தெரிவிக்கிறது.
தீண்டாமை ஒழிக்க சமுதாயத் தலைவர்களை சந்தித்தது, பாதயாத்திரை மேற்கொண்டு பாடு பட்ட இயக்கம். அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப் பாடுபட்டது. சமூக மாற்றத்திற்கான முயற்சிகளையும் குறிப்பிட்டுள்ளது. இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும், தேசப்பற்றும், தெய்வ பக்தியுடன் வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்