சூழலுக்கு ஏற்ப மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். நாட்டின் விடுதலைக்கு முன் துவங்கி, அதன் பின் ஏற்பட்ட வளர்ச்சியை பறைசாற்றி பயணிக்கிறது. ஏழைகளுக்கு கல்வி எட்டாக் கனியாக இருந்ததை மிக நுட்பமாக காட்டப்பட்டுள்ளது. விடுதலை பெற்ற காலத்தில் ஆர்வமும், உழைப்பும், போராடி பெறும் பண்பும் இருந்தால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.
இரண்டு பெரும் அரசியல் காலங்களை முன் வைத்து வளர்ச்சியை மையப்படுத்தியுள்ளது. பெண்கள் முன்னேற்றம் சமூக வளர்ச்சியை மேம்படுத்தும் என்ற கருத்தும் உரைக்கப்பட்டு உள்ளது. மனித நேயம், ஜாதி மறுப்பு திருமணம் போன்ற மேம்பட்ட சிந்தனைகளை விதைக்கும் நுால்.
– ராம்