மார்க்சியம் குறித்த புதிய பார்வையுடன், அதன் வரலாறு, வளர்ச்சி, எதிர்காலம் பற்றி விவரிக்கும் நுால். ‘பொருள் முதல்வாதம், அறவியல் பார்வை, அந்நியமாதல், கீழைமார்க்சியம், மார்க்சியம் தோற்றுவிட்டதா, அதற்கு அழிவில்லை’ போன்ற கட்டுரைகளில் தனித்த பார்வை முன்வைக்கப்படுகிறது.
இயற்கை விஞ்ஞானம் முழு வளர்ச்சி பெறும்போது, மெய்யியலுக்கு இடமில்லாமல் போகும் என்ற கருத்து அறிவியல் பூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இயற்கை நிலைகளைத் தனிமனிதர் உடைமை ஆக்குவது அறமற்ற செயல் என்ற அடிப்படையை, ‘மார்க்சியமும் அறவியலும்’ என்ற கட்டுரை தெரிவிக்கிறது.
திராவிடமும் மார்க்சியமும் ஒரு மையப்புள்ளியை நோக்கி சமன், முரணாக உள்ளதை விவரிக்கிறது. புதிய தகவல்களை கொண்டுள்ள நுால்.
– ராம.குருநாதன்