இயற்கை, மனித உணர்வுகளை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வலியுறுத்தும் கவிதை தொகுப்பு. அழகும், ஆழமும் கெடாத மொழிபெயர்ப்பு. தம்பதியின் பிணைப்பை, ‘உன்னை நான் இழந்தேன்’ கவிதை உணர்ச்சி பொங்க கூறுகிறது.
சலிப்பு ஏற்பட்டால், சிலந்தி வலையில் சிக்கிக் கொள்வோம் என்கிறது. குறைபாடுகளை, குயில், கடல், ரோஜாவிடம் கேட்கச் சொல்கிறது. கடல் பயணத்தின் ஓசையை, இசை கோர்வையால் கோர்க்கிறது. பெண்ணின் இமைகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியங்களை ஆராய வைக்கிறது. நதியின் சத்தத்தை இசை நயத்துடன் கேட்கத் துாண்டும், ‘நதியின் கீதம்’ கவிதை அழகு சேர்க்கிறது. மழைக்கால மாயாஜாலங்களை இடியாகப் பொழிய வைக்கிறது. வாழ்வியல் கருத்தைக் கூறுகிறது.
– -டி.எஸ்.ராயன்