பள்ளி பெண் நிர்வாகிக்கும், ஆசிரியருக்கும் நடைபெறும் ஒரு மவுனப் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல். பெண் மனதில் இடம் பிடிக்க ஆசிரியர் செய்யும் முயற்சிகளையும், பழைய காதலியின் நினைவுடன் நிர்வாகியை அணுக முயற்சிப்பதையும் கூறுகிறது. அதைத் தவிர்க்க முடியாமல் பெண் நிர்வாகி, மனிதாபிமானத்திற்கும், பெண்ணுக்கே உரிய பண்பாட்டிற்கும் இடையே மனப் போராட்டம் நடத்துவதும் த்ரில்லாக உள்ளது.
மனிதாபிமானம் மற்றும் காதலின் இனிமையையும், தமிழ்ப் பெண்களின் குணத்தையும் பண்பாட்டையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. கதைக்காகக் கூட நம் பண்பாட்டையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் மீறுவது தர்மம் அல்ல என்ற உயரிய சிந்தனையோடு எழுதப்பட்டுள்ளது.
– இளங்கோவன்