மேடை நாடகம் நாவல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. சிலர் மற்றவர் சுமையை தாங்க பிறப்பெடுத்தவர்கள் என, கதாபாத்திரத்தை சுட்டிக்காட்டி ஆரம்பிக்கிறது.
ஆலயத்துக்கு புதிதாக வரும் பாதிரியார், பழையவரிடம் அறிமுகமாகி, பொறுப்புகளை கவனிக்க ஆரம்பிக்கிறார். அங்கு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள பெண்ணை, அரசியல்வாதி மகன் காதலிக்கிறான். அவ்வூரில் வசிப்பவர், பெண்ணை திருமணம் செய்து சொத்தை அடைய நினைக்கிறார். அதற்கு பெண் சம்மதிக்கவில்லை.
ஆதரவற்ற இல்லத்தில் வசிக்கும் பெண்ணுக்கு நோய் என தெரிந்தும், வாலிபர் திருமணம் செய்து கொள்ள சம்மதித்து தந்தையுடன் சென்று, பாதிரியாரிடம் பெண் கேட்கிறான். அந்த பெண்ணின் திருமணம் நடந்ததா? பேராசை நபரின் ஆசை நிறைவேறியதா என திருப்பங்கள் நிறைந்த நுால்.
– முகில் குமரன்