எதிரொலி விசுவநாதன் எழுதிய தம்பி நீ வாழ்க! பாவேந்தர் போற்றும் பாரதி, வரலாறு படைத்த மூவர், பாரதி பார்வையில் ராமாயணம் என்ற நான்கு நுால்களிலும் கார்முகிலோன் அளித்த அகவுரைகள் தொகுத்து ஆக்கப்பட்டுள்ள நுால்.
ஒவ்வொரு அகவுரையும் சுருக்கமாய், சாரமாய் அமைந்து சிறப்பிக்கின்றன. பாரதியுடன் நெருங்கிப் பழகிய பரலி சு.நெல்லையப்பரைப் பற்றி, தம்பி நீ வாழ்க என்றும், பாரதியைப் போற்றிய பாரதிதாசனை பற்றியும் உரைக்கிறது.
வெ.சாமிநாத சர்மா, நாரணதுரைக்கண்ணன் பற்றியும் விவரிக்கிறது. ராமாயணத்தை பாரதி எவ்வாறு அணுகியுள்ளார் என விளக்குகிறது. எதிரொலியார் நுால்களை படிக்கத் துாண்டுகிறது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்