தமிழகத்தில் மக்களின் பல்வகை உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.
பொதுவுடைமை பூக்கவும், பெண் அடிமை நீக்கவும், வறுமையைப் போக்கவும், நாட்டைக் காக்கவும் நல்வழி காட்டும் கவிதை வரிகள் மனதோடு பேசுகின்றன. புலமையை, பொருளை, வாழ்கின்ற வாய்ப்பை, கலையை, கடமையை, உரிமையை எல்லாம் பொதுவாக்க வேண்டும் என கூறுகிறது.
பெண் அடிமை நீக்கும் வரிகள் பளிச்சென மனதில் குத்துகின்றன. ‘தட்டுறு தடையது தாழ்ந்து மடிந்திட; வெற்றி எனுந்திரு மேவி மகிழ்ந்திட பட்டென எழுமின் வீரர்காள்’ போன்ற ஆற்றல் மிகு வரிகள் ஆற்றுப்படுத்துகின்றன. ஆளுமை வளர்ச்சிக்கும், அறிவுப் பெருக்கத்திற்கும், பண்பு நலனுக்கும் வெளிச்சம் பாய்ச்சும் கவிதைகளின் தொகுப்பு நுால்.
–- புலவர் சு.மதியழகன்